The second look poster of Srinath Rajendran’s ‘Kurup’ starring Dulquer Salman is out.

367

One of the most anticipated movie from mollywood “Kurup” should have released on the big screen this week, none the less Dulquer has rolled out a festive gift in the form of second look poster for the movie.
After the second show, Dulquer’s debut film, the director of the same Srinath Rajendran and Dulquer are reuniting for this mega project with a budget of Rs 35 crore.

The second look poster of Srinath Rajendran’s ‘Kurup’ starring Dulquer Salman is out. Dulquer’s poster came as a surprise to fans. The poster features Dulquer as “kurup”in a stylish get-up with a coat and cooling glass. The film drawing inspiration from the life of the infamous fugitive Sukumara Kurup should have reached the theaters at this festival season. But the release of Covid 19 has been postponed.

In his career this is the biggest budget mollywood movie that dulquer has ventured into. Dulquer has produced the same under his banner Wayfarer Films along with M Star Entertainment. The movie was extensively shot in various parts of India (Kerala, Ahmedabad, Mumbai, Mangalore and Mysore) and UAE. The story and dialogues for the movie is by Jithin K Jose and written by Daniel Sayooj Nair and KS Aravind. Nimish Ravi is the cinematographer and Sushin Shyam is the music director. Vini Vishwa Lal is the creative director behind Kurup. Editing by Vivek Harshan. Production design Banglan

Shobhitha Dhulipala is the heroine of the movie. The film also stars Indrajith Sukumaran, Sunny Wayne, Shine Tom Chacko, Vijayaraghavan, P Balachandran, Surabhi Lakshmi and Sivajith Padmanabhan. Praveen Chandran Chief Associate Director, Vignesh Kishan Rajeesh, Sound Design.

As the movie is at the end of post production we can expect it to release as soon as the film industry is back in action.

ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் நடிக்கும் ‘குரூப்’!

பெரிதும் எதிர்பார்க்கப்படும் துல்கரின் ‘குரூப்’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் மட்டும் விழாக் கால பரிசாக இப்போது வெளியாகியிருக்கிறது. துல்கரின் முதல் படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இப்படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார். 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமான முறையில் இப்படம் உருவாகியிருக்கிறது.

ஸ்ரீநாத் ராஜேந்திரனின் ‘குரூப்’ படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர், ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. கோட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் குரூப்பாக காட்சியளிக்கிறார் துல்கர். தப்பிப் பிழைத்த பிரபலம் அல்லாத சுகுமார் குரூப்பின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், நடப்பு வாரத்திலேயே வெள்ளித் திரையில் வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக வெளியீடு தள்ளிப் போய்விட்டது.

துல்கர் நடித்த படங்களிலேயே மிக அதிக பொருள் செலவில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத் தக்கது. துல்கரின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் ஃபிலிம்ஸ், எம்.ஸ்டார் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘குரூப்’ படத்தை தயாரித்திருக்கிறது. இந்தியாவில் கேரளா, அகமதாபாத், மும்பாய், பெங்களூரு, மங்களூர் மற்றும் மைசூர் ஆகிய இடங்களிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும்படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. ஜிதின் கே.ஜோஸ் கதை வசனம் எழுதியிருக்கும் இப்படத்துக்கு டேனியல் செயூஜ் நாயர் மற்றும் கே.எஸ்.அரவிந்த் திரைக்கதை அமைத்திருக்கின்றனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சுஸின் ஷ்யாம் இசையமைத்திருக்கிறார். குரூப் படத்தின் கிரியேடிவ் டைரக்டர் பொறுப்பு ஏற்றிருப்பவர் வினி விஷ்வா லால். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பை கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பை பங்லான் செய்திருக்கிறார்.

ஷோபிதா துலிப்பாலா நாயகியாக நடித்திருக்கும் குரூப் படத்தில் இந்திரஜித் சுகுமாரன், சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ, விஜயராகவன், பி.பாலசந்தரன், சுரபி லட்சுமி மற்றும் சிவாஜித் பத்மநாபன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர். பிரவீன் சந்திரன் பிரதான இணை இயக்குநராகப் பணியாற்ற, விக்னேஷ் கிஸன் ராஜீஷ் ஒலி வடிவமைப் கவனிக்கிறார்.

பின் தயாரிப்புப் பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கும் குரூப் படம், திரையுலகம் தன் இயல்புநிலைக்கு திரும்பியதும் அரங்குகளுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

 

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com