Actor Pawan Kalyan, who floated his party Jana Sena recently, is busy building it strong in both Telugu speaking states- Andhra Pradesh and Telangana. Now
காற்றின் மொழி – பாடல் எழுதும் போட்டி – தேர்வு பெற்றவர்களுடன் ஒரு கலந்துரையாடல்! காற்றின் மொழி திரைப்படத்தின் படக்குழு பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. இதில் தமிழகமுழுவுவதிலுமிருந்து 700 பேர்
“Vels Family Day Celebration”. வேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறார்கள்.
National Tourism Award Trident, Chennai wins National Tourism Award for the Best 5-Star Category Hotel in India Commemorating World Tourism Day, the Ministry of
சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டுகளித்தார். உடன் துர்காஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ,
மராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த “கூகைதிரைப்பட இயக்க நூலகம்“ இயக்குனர் பா.இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் “கூகை திரைப்படஇயக்கம்” எனும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதற்காக பெரும் நூலகம் ஒன்றைஉருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் நண்பர்கள் உதவியோடு நூலகம் ஒன்றை இன்றுதுவங்கியிருக்கிறார். சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பின் அலுவலகத்தைசாய்ரட் பட இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு, இயக்குனர் ராம், லெனின் பாரதி, மாரிசெல்வராஜ், உள்ளிட்ட திறைத்துறை சார்ந்த இயக்குனர்கள் ,உதவி இயக்குனர்கள்கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே …. “ மராட்டிய மானிலத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதுபெரும் மகிழ்ச்சியாக உள்ளது, இயக்குனர் இரஞ்சித், மாரி செல்வராஜ், ராம் உள்ளிட்டநண்பர்களுக்கு எனது நன்றிகள் . இங்கு வந்ததும் பரியேறும் பெருமாள் படம் பார்த்தேன் . இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சாதி ஒரே மாதிரிதான் இன்னும் தனது வன்மத்தைகாட்டிக்கொண்டு இருக்கிறது. கலைஞர்களாகிய நமக்கு சாதி ஒழிப்பைக்குறித்து நாம் நமதுபடைப்புகள் மூலமாக ஒரு உரையாடலை நிகழ்த்த முடியும், அந்த வகையில் ரஞ்சித்தும்,மாரிசெல்வராஜையும் பாராட்டுகிறேன். என்னோடு பயணிக்க தமிழகத்தில் இருவர்இருக்கிறார்கள் என்பதில் பெரும் மகிழ்ச்சி. கூகை திரைப்பட இயக்கம் அமைப்பு மூலமாக நூலகம் திறந்திருப்பது நல்ல முயற்ச்சிஇயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும், வாசிப்பு என்பதுதிறைப்படத்துறையில் இருப்பவர்களுக்கு மிக மிக அவசியம் . புத்தகம் உங்களைசெழுமைப்படுத்தும் . இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார். விழாவில் பேசிய நடிகை குஷ்பு “இந்த நூலகம் உதவி இயக்குனர்களுக்கு மட்டுமல்ல இயக்குனர்களுக்கும் அவசியமான ஒன்று. என் குழந்தைகளும் வாசிப்பு பழக்கம் இருக்கிறது. புத்தகம் படிப்பது நம்மைதைரியமானவர்களாக்கும், யாரையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றலை தரும். இந்தநூலகத்தை திறந்திருக்கும் இயக்குனர் பா.இரஞ்சித்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்றார். இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், புத்தகம் மூலம் தான் உலகை அறிய முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நான்புத்தகம் மூலம் தான் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். உதவி இயக்குனராக இருந்த போதுஒவ்வொரு புத்தகங்களையும் தேடித்தேடி வாசித்தேன். அப்போது தான் ஒன்று தோன்றியது. உதவிஇயக்குனர்களுக்கு என்று ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று. வாசிப்பின் வழியாகவும்வாசித்ததை உரையாடுவதின் வாயிலாகவும் ஒரு படைப்பாளி நிறைய கற்றுக்கொள்ள முடியும்.ஒரு படத்தைப் பார்த்தால் அதில் காட்சி வழியாக நமக்கு எல்லாம் காட்டப்பட்டு விடும். ஆனால்புத்தகம் படித்தால் தான் அந்த எழுத்துக்கு நாம் கற்பனை செய்ய முடியும். இந்த நல்விழாவிற்குவருகை தந்த சாய்ரட் இயக்குனர், இயக்குனர் ராம் சார், தோழர் குஷ்பு அனைவருக்கும் நன்றி” என்றார்.