Author : Naveen

3123 Posts - 0 Comments
Kollywood News

அடுத்த வாரம் “எம். ஜி. ஆர்” திரைப்படத்தின் ‘டீஸர்’ வெளியீடு

Naveen
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்’என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ்நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் வாழ்க்கை வரலாற்றினை மாபெரும் பொருட்செலவில் ‘எம். ஜி. ஆர்’  எனும் பெயரில் திரைப்படமாகத்தயாரித்து வருகிறது . இத்திரைப்படத்தில் எம்.ஜி .ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட  பிரபல விளம்பரப்பட நாயகன்  சதிஷ் குமார் எம். ஜி. ஆர் வேடத்தில் நடிக்கிறார் .எம். ஜி.ஆரின்  மனைவி  ஜானகி அம்மையாராக ரித்விகாவும், M .R . ராதாவாக பாலாசிங்,  இயக்குநர் பந்துலுவாக Y .G மகேந்திரன், எம். ஜி.ஆரின்அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடகக் கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி மற்றும் பலர்நடிக்கின்றனர். ஒளிப்பதிவை எட்வின் சகாய் கையாள படத்தொகுப்பை அகமது கவனிக்கிறார். எம் . ஜி . ஆர் தனது திரைப்படத்தில் கதைக்கும் தனது கதாபாத்திரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போன்றே படத்தில் இடம் பெறும்பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அதனால்தான் அவரது பாடல்கள் இன்றும் சாகாவரம் பெற்று மக்களின் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதே போன்றே இத்திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களும் இருக்க வேண்டும்  என்பதால் எம். ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியபாடலாசிரியர்களான கவிஞர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம்,  மற்றும் கவிஞர் பூவை செங்குட்டுவன் ஆகியோர் இத்திரைப்படத்திற்குபெரும்பாலான பாடல்களை எழுதியுள்ளனர் . இப்படத்திற்கு  ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளனர். அடுத்த வாரம்  இத்திரைப்படத்தின்  ‘டீசரை’ வெளியிட உள்ளதாக ‘எம். ஜி. ஆர்’ திரைப்படத்தின் இயக்குனர் , தயாரிப்பாளர் அ. பாலகிருஷ்ணன்தெரிவித்துள்ளார். . சென்ற ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்பினை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்  துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Movie Gallery

Charlie Chaplin 2 Movie Gallery & Preview

Naveen
                  சார்லி சாப்ளின் 2 படத்திற்காக        செந்தில் கணேஷ் –  ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு  அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக டி.சிவா மிகப் பிரமாண்டமாக
Movie Gallery

Pettikadai Movie Gallery & Preview

Naveen
கார்ப்பரேட் அநியாயங்களை தோலுரிக்கும் படம்                     சமுத்திரகனி நடிக்கும் “பெட்டிக்கடை”      இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார் லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம்
WP2FB Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami