Movie Gallery

Mayuran Movie Gallery & Preview

Mayuran Movie Gallery

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

கல்லூரி விடுதிகளில் நடக்கும்  சம்பவங்களை            மையமாக கொண்டுஉருவாகியுள்ள படம்                  “ மயூரன் “

 PFS  ஃபினாகில்  பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம்சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன்,  M .P. கார்த்திக் ஆகியநால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “  மயூரன் என்றால்விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.

வேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்(தாரை தப்பட்டை ),  அஸ்மிதா ( மிஸ் பெமினா வின்னர் ) மற்றும் பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள்அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஒளிப்பதிவு    –        பரமேஷ்வர் (இவர் ந்தோஷ்சிவனிடம்  உதவியாளராகபணியாற்றியவர்)

இசை           –        ஜுபின் ( பழையவண்ணாரப்பேட்டை )  மற்றும்  ஜெரார்ட்இருவரும்.

பாடல்கள்    –        குகை மா.புகழேந்தி

எடிட்டிங்     –       அஸ்வின்

ஸ்டன்ட்      -டான்அசோக்

நடனம்        –       ஜாய்மதி

மக்கள் தொடர்பு  –          மணவை புவன்

தயாரிப்பு  – K.அசோக்குமார்,P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  நந்தன் சுப்பராயன் ( இவர் இயக்குனர்பாலாவின் நந்தா, பிதாமகன்  போன்ற படங்களில் உதவியாளராகபணியாற்றியவர் )

படம் பற்றி இயக்குனர் நந்தன்சுப்பராயன் கூறியது…

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும்ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகத்தான்இருக்கிறது. நிர்பந்தங்கள் இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் நிர்பந்தத்திற்குபணி யாதவர்கள் போராளிகள். இங்கு அதிர்ஷ்டசாலி களைவிட போராளிகளேஅதிகம். நியாயத்தின் பக்கம் நிற்கும் யாவர்க்கும் அதிகாரம் படைத்தவர்களின்பரிசு எப்போதும் உயிர் பயம் காட்டுவது தான், அதற்கு நல்லவர்கள் கொடுக்கும்விலை தனிமை… யார் கண்ணிலும் படாத தலைமறைவு வாழ்க்கை… மற்றும்உனக்கு எதுக்கு வம்பு எனும் அறிவுரைகள் மட்டும்தான்.

சொல்லிக்கொடுக்கப்பட்ட மரபுகளிலிருந்து விலகி நிற்பவனை உலகம்வேறுவிதமாகத்தான் பார்க்கிறது. மயூரன் விரைந்துன்னை காக்க வருபவன்என்று பொருள்படும்,  இன்னொரு இடத்தில் வெற்றி புனைபவன் என்றும்சொல்லலாம்.

கல்லூரி விடுதி தான் கதைக்களம். என்னால் எதுவும் செய்ய முடியும் எனஎழுச்சியூட்டும்  பருவத்தினர் ஒட்டுமொத்தமாக வசிக்கும் ஒரு சமூகம்… ஒருதேசம்…

அடர்ந்த வனங்களில் காணப்படும் பல்வேறு தாவரங்கள் போன்றவர்கள். ஒன்றுமரம், ஒன்று செடி, ஒன்று கூடி. ஒரே நிலத்தில் வாழ்ந்தாலும் ஒவ்வொன்றும்ஒவ்வொரு குணம். இங்கே சந்திக்கும் முகங்கள் இயல்பாய் பழகும் நட்பையும்உருவாக்குகிறது,  எதிரான எண்ணம் கொண்டவர்களிடம் குரோதமும், பகையும்வளர்க்கிறது. என் எண்ணம், என் விருப்பம் என்பதைத் தாண்டி, எது நியாயம் எதுதர்மம் அது கொடுக்கும் அடுத்த வினாடி ஆச்சரியம் தான் வாழ்க்கை. முடிந்தவரை நியாய  உணர்வுகளை அலங்காரம் இன்றி சொல்லியிருக்கும்படம் தான் மயூரன்.

படம்  ஆகஸ்ட் 2  ஆம் தேதி தயாரிப்பாளர் H.முரளி அவர்கள் Banner மூலமாகவெளியிட பட உள்ளது.  என்றார் இயக்குனர் நந்தன் சுப்பராயன்.

Related Articles

“New Villain” Tini Tom in K-Town!

Naveen

Nivetha Pethuraj is Hollywood bound

Naveen

Lock Up Movie Gallery & Preview

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami