Celebrity Events

K Balachnder’s 89th Birthday Celebration Event stills & News

K Balachnder’s 89th Birthday Celebration

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

இயக்குனர் சிகரம், திரைக்களத்தின் மகா சக்ரவர்த்தி திரு. கே. பாலசந்தர் அவர்களின் 89-ஆவது பிறந்தநாள் விழா!

சினிமாவின் இயக்குனர் சிகரம், திரைக்களத்தின் மகா சக்ரவர்த்தி என போற்றப்படுபவர் மறைந்த திரு. கே. பாலசந்தர் அவர்கள். இவரது 89-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னையில் உள்ள மயிலாப்பூர் சித்திரை குளம் அருகே மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்கள் பலர் கலந்து கொண்டனர்.

கே. பாலசந்தர் அவர்களின் புதல்வி புஷ்பாகந்தசாமி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அவர் கலந்துக் கொண்டு திரைப்படத் துறையில் பணி புரிந்துக் கொண்டிருக்கும் பல உதவி இயக்குனர்களுக்கு எழுதுப்பலகையும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார். இயக்குனர் வசந்த், ஒளிப்பதிவாளர் ரகுநாதரெட்டி, பூவிலங்கு மோகன், நகைச்சுவை நடிகர் தாமு, நடிகர் ராஜ்கமல், சித்த மருத்துவர் வேல்பாண்டியன், ஜெயந்தி கண்ணப்பன், காவல்துறை அதிகாரி சாய் அண்ணாமலை, நடிகை லதாராவ் ஆகியோர் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். ஒளிப்பதிவாளர் கவிதாலயா பாபு, கவிதாலயா பழனி, ஸ்டில்ஸ் செல்வம், ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் அனைவரையும் வரவேற்று பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

 

Related Articles

Nenjamundu Nermaiyundu Odu Raja Suceess Meet Event stills

Naveen

Chiranjeevi becomes grandfather once again

Naveen

Actors Vishal and Anisha engaged in private ceremony in Hyderabad

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami