Actor Actress Gallery

“புதுமுகங்களை வைத்து அனுபவமிக்க நடிப்பை வெளிக்கொண்டு வருவது தான் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது” – இயக்குநர் சுரேந்தர்

‘மாயபிம்பம்’ படத்தில் தான் எதிர்கொண்ட சவால்களைக் கூறுகிறார் அப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுரேந்தர்.

நான் படிப்பதற்காகத் தான் சென்னை வந்தேன். சிறுவயது விருப்பத்தை அடைய பல சவால்களைச் சந்தித்தேன். அதில் முதல் சவாலாக இருந்தது தயாரிப்பாளர் அமைந்தது தான். புதுமுகங்களை வைத்து தான் எடுப்பேன் என்ற என் பிடிவாதம் தான் தயாரிப்பாளர் கிடைப்பதில் சிரமம் இருந்தது. இறுதியில் என் பெற்றோரே இப்படத்திடற்கான செலவை ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால், இதை விட எனக்கு மிகப்பெரிய சவால் காத்திருந்தது. புதுமுகங்களை வைத்து அனுபவமிக்க நடிப்பை வெளிக்கொண்டு வருவது தான் அது. ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை நானே நடித்துக் காட்டுவேன். ஆகையால், நினைத்ததை விட அதிக நாட்கள் ஆனது. இப்படத்தில் நடித்தவர்களும் அதைப் புரிந்துகொண்டு சளைக்காமல் நடித்தார்கள்.

இப்படத்தில் எந்த டேக் ஓகே ஆகுதென்று பார்க்கமாட்டேன். ஒரு காட்சி சுமார் 22 டேக் வரை சென்றால் அதில் எந்த காட்சி நான் நினைத்தது போல் வந்ததோ அந்த காட்சியை எடுத்துக் கொள்வேன். படப்பிடிப்பு தளத்தை விட படத்தொகுப்பில் தான் முக்கிய பங்காற்றியிருக்கிறோம்.

கதாநாயகி கிடைக்கத்தான் 8 மாதங்கள் ஆகின. ஏனென்றால், இக்கதைக்கு கலராகவோ, பேரழகியோ தேவையில்லை. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்க வேண்டும். அப்படி தேடித்தான் ஜானகி கிடைத்தார். நாயகனும் பார்ப்பதற்கு நடுத்தர குடும்பத்து பையனாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆடிஷனில் ஆகாஷ் கிடைத்தார். அதேபோல் மற்றவர்களையும் ஆடிஷன் வைத்து தான் தேர்வு செய்தேன்.

இசையமைப்பாளர் எட்வினுக்கு இது முதல் படமாக இருந்தாலும் குறும்படங்களுக்கு இசையமைத்த அனுபவம் இருக்கிறது. அவரைத் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்குமே இது முதல் படம் தான்.

பாலத்தில் நடக்கும் கட்சியைத் தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் செட் போடாமல் பொதுமக்களோடு தான் படப்பிடிப்பு நடத்தினோம்.

ஜூலை மாதம் 2-ம் வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

VT சினிமாஸ்- ன் தாய் சரவணன் வெளியிடுகிறார்.

இவ்வாறு இயக்குநர் சுரேந்தர் கூறினார்

Related Articles

Janjanna Galrani Actress Gallery

Naveen

Sounderaraja Actor Gallery & News

Naveen

Adhik Ravichandran in Arulnithi-Shraddha Srinath starrer ‘K 13’

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami