Trailers

K13 Official Teaser | Arulnithi, Shraddha Srinath, Yogi Babu | Sam C.S | Barath Neelakantan

Arulnithi-Shraddha Srinath starrer ‘K13’ Teaser spins off curiosities to peak

Teasers have now become the real acid tests, where the responsibility becomes so much intense to exhibit the film’s premise in shorter duration. Moreover, things turn to be slightly complex, where revealing anything more than the limits could be a spoiler. 

However, filmmaker Barath Neelakantan’s K13 teaser featuring Arulnithi and Shraddha Srinath in lead roles stands out to be a tremendous one. The 84 seconds teaser has stormed up the viewers with unlimited curiosities to know what this film is is all about. The relentless questions like is it is hostage drama, psychological thriller or fantasy one, etc – keeps resonating. Ask filmmaker Barath and he says, “It was literally more challenging to finalize the teaser as we had to go through many other versions too. Thanks to my team, especially editor Ruben for his creative approach.

As said, anything more than this could turn out to be a suspense spoiler.” Regarding the genre and premise of the story, he says, “Yes, it’s a thriller and the rest is something audience should experience it themselves on big screens.”

In addition, the director Barath Neelakantan has taken a blind bet of revealing all the characters including filmmaker Adhik Ravichandran, who was recently reported of playing a crucial role in this movie. “We wanted this teaser not just to be a curtain raiser, but to be a slightest attempt to establish characters too. These days, audiences and film buffs are keen on knowing even the minimal roles even before watching the film. So we attempted something on this and are happy that people have now recognised the characters.” 

Produced by SP Shankar and Santha Priya for SP Cinemas, K 13 also features Yogi Babu in an important role with Sam CS composing music, Aravinnd Singh handling cinematography and Ruben editing the shots.

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய ‘K13’ டீசர்!

டீசர்கள் தான் இப்போது உண்மையான அமில சோதனைகளாக மாறி விட்டன. ஏனெனில் குறிப்பிட்ட சில நொடிகளில் படத்தின் கதை மற்றும் களம் சார்ந்த விஷயங்களை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும். மேலும், எல்லையை மீறி எந்த முக்கிய காட்சியையும் வெளிப்படுத்தி விடக் கூடாது. அப்படி வெளியானால் அது படத்தின் ஆர்வத்தை குறைத்து விடவும் வாய்ப்பு உண்டு. ஆனாலும் அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இயக்குனர் பரத் நீலகண்டனின் K13 டீசர் மிகச்சிறப்பாக உருவாகியுள்ளது. 84 விநாடிகள் ஓடும் இந்த டீசர் பார்வையாளர்களிடையே படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. இது கடத்தல் நாடகமா? உளவியல் சார்ந்த த்ரில்லர்?  அல்லது ஃபேண்டஸி படமா? என்பன போன்ற பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இது குறித்து இயக்குனர் பரத் கூறும்போது, “டீசரை இறுதி வடிவத்துக்கு கொண்டு வர மிகவும் சவாலாக இருந்தது. வேறு பல பதிப்புகளையும் தயார் செய்தோம். என் குழுவுக்கு நன்றி, குறிப்பாக இதை கிரியேட்டிவாக அணுகிய படத்தொகுப்பாளர் ரூபனுக்கு நன்றி. இதற்கு மேல் எதையும் சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும். இது ஒரு திரில்லர் படம் தான், மற்றவற்றை பார்வையாளர்களே பெரிய திரைகளில் பார்த்து அனுபவிக்கட்டும்” என்றார்.

மேலும், இயக்குனர் பரத் நீலகண்டன், சமீபத்தில் படக்குழுவில் இணைந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தையும் டீசரில் வெளிப்படுத்தி விட்டார். அது குறித்து அவர் கூறும்போது ‘நாங்கள் இந்த டீசர் வெறும் ஒரு முன்னோட்டமாக மட்டும் இருப்பதை விரும்பவில்லை, மாறாக கதாபாத்திரங்களை பற்றி சொல்ல முயற்சித்தோம். இப்போதெல்லாம் பார்வையாளர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் படம் பார்க்கும் முன்பு சின்ன கதாபாத்திரங்களை கூட தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே நாங்கள் இதை முயன்றோம், இப்போது மக்கள் அந்த கதாபாத்திரங்களை அடையாளம் கண்டு கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
SP சினிமாஸ் சார்பில் SP ஷங்கர் மற்றும் சாந்த பிரியா தயாரிக்கின்றனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங்கை கையாள்கிறார்.

Related Articles

Mr. KK | Telugu Official Trailer | Kamal Haasan | Chiyaan Vikram | Rajesh M Selva | Ghibran

Naveen

Gypsy | Official Teaser | Jiiva | Natasha Singh | Raju Murugan | Santhosh Narayanan

Naveen

Ganesha Meendum Santhippom – Moviebuff Sneak Peek | Prithivi Rajan, Oviya

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami