Movie Gallery Uncategorized

IPC 376 Movie Gallery & Preview

IPC 376 Movie Gallery

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

IPC 376 Preview

இது த்ரில்லர் படம். சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், காமெடி  எல்லாம் கலந்த கமர்ஷியல் கதை. நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆ க்சன்கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார்.

படம் முழுக்க ஆக்‌ஷன் நிரம்பியிருக்கும்.சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஆக்‌ஷன்கோரியோகிராஃபி பண்ணுகிறார்.படத்தில் வித்தியாசமான ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.இது ஹீரோக்கள் பண்ண வேண்டிய கதை.ஆனா ஹீரோக்கள் பண்ண முடியாத கதை.

இப்ப சமூக வலைதளங்கள்தான் பரபரப்பா இயங்கிக் கிட்டிருக்காங்க.டைட்டிலை வலைதளத்தில் தேடும்போதே இது எது சம்பந்தமான கதை என்பதை யூகித்து விடுவார்கள்.ஆனால் என்ன கதை என்பதை யூகிக்க முடியாது.பெண்களைஇழிவுபடுத்தி வந்துகொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இது பெண்கள் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும். 

     த்ரில்லர், சஸ்பென்ஸ் என்பதையும் தாண்டி யூகிக்க முடியாத இன்னொரு விஷயமும் படத்தில் ஹைலைட்டாக இருக்கும்.பிரபுசாலமன்,பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் பல படங்களில் பல மொழிகளில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ராம்குமார் சுப்பாராமன் படத்தைஇயக்குகிறார்.தகராறு, அண்ணாத்துரை படங்களின் ஒளிப்பதிவாளர் k. தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் R.நிர்மல் படத் தொகுப்பைக் கவனிக்கிறார்.

        படத்தின் தயாரிப்பாளர் S. பிரபாகர் பிரபலவிநியோகஸ்தர்.96, ஜூங்கா, பென்சில் போன்ற பல வெற்றிப் படங்களை விநியோகம்செய்தவர். டிஸ்ட்ரிபியூட்டர் மற்றுமல்லாது எக்ஸிபிட்டரும்கூட. பல தியேட்டர்களை நடத்தி வருகிறார். இயக்குநர் சொன்ன கதையை நம்பிதயாரிப்பாளராக களமிறங்குகிறார்.அவர் முதல்முறையாக தமிழ் தெலுங்கில் தயாரிக்கும் பைலிங்குவல் படம் இது.

Related Articles

Cricketer Ashwin slams fans of Ajith and Vijay for nasty online war

Naveen

BOFTA G DHANANJAYAN  PARTNERS WITH PRODUCERS OF SAMANTHA STARRER U-TURN FOR TAMIL NADU 

Naveen

Like Pannunga Share Pannunga Movie Gallery & Preview

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami