Movie Preview

Paris Paris Movie Preview

பாரிஸ் பாரிஸ்

படப்பிடிப்பு முடிவடைந்தது

அக்டோபர் வெளியிடு

குயீன் படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். 

தமிழில் “பாரிஸ் பாரிஸ்”, தெலுங்கில் “தட்ஸ் மஹாலக்ஷ்மி”, கன்னடத்தில் “பட்டர்ப்ளை”, மலையாளத்தில் “ஜாம் ஜாம்” என்றும் படத்திற்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல்யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார். 

ஐரோப்பவில் நடைபெற்ற இப்படங்களின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.

தயாரிப்பாளர் மனுகுமரன், “படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அனைத்து நடிகர்களும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர்களின் வித்தியாசமான பரிநாமங்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவரும்” என்றார். 

இப்படத்தின் துணை தயாரிப்பாளரும் கன்னடத்தில் உருவாகும்  “பட்டர்ப்ளை” படத்தின் நாயகியுமான பருல்யாதவ் கூறுகையில், “இவ்வளவு பெரிய மற்றும் அரிய வகையான ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்கும் திட்டத்தை வெற்றிக்கரமாக முடித்திருப்பது மிகவும் திருப்தியளிப்பதாகவுள்ளது” என்றார். 

அமித் திரிவேதி இந்த நான்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். குயீன் படத்திற்க்கும் இசையமைத்தவர் அமீத் திரிவேதி என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்கோ – சீசர் மற்றும் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து கொடுத்துள்ளனர்.

அக்டோபர் மாதம் “பாரிஸ் பாரிஸ்”, “தட்ஸ் மஹாலக்ஷ்மி”, “பட்டர்ப்ளை”, “ஜாம் ஜாம்” படங்கள் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Queen Remakes complete production in Europe.

The ambitious four film simultaneous remakes of the Hindi blockbuster Queen in the South Indian languages has completed the second and final European schedule. Featuring Kajal Aggarwal, Tamannah Bhatia, Parul Yadav and Manjima Mohan in the lead roles the movies are expected to release this October.
Titled Paris Paris, Butterfly, ZamZam and That Is Mahalkshmi and directed by Ramesh Aravind (Tamil & Kannada), Neelakanta (Malayalam) and Prasanth Varma (Telugu) the films feature music by Amit Trivedi. All songs have been recorded and shot. Choreographers Bosco-Caeser and Ganesh Acharya have shot the songs.
Producer Manu Kumaran stated that he was extremely happy with the quality of the footage and was excited about the 4 very different versions. Each actor has created her own version of the central character and the audience will be fascinated by the range of the interpretations. No one expected us to complete this project and looking back it was definitely a super brave move to take on such a complex project, added Co Producer Parul Yadav who is also headlining Butterfly, the Kannada version.

Related Articles

Actor Harish Kalyan next project Direction by Ranjit Jeyakodi

Naveen

“Kaadhalai thedi Nithya Nandha” Movie Preview

Naveen

July Kaatril Movie Preview

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami