18.05.09 Movie Gallery & Preview

By

18.05.09 MG

Flickr Album Gallery Powered By: Weblizar

           இசைஞானி இளையராஜா இசையில்

         கு.கணேசன் இயக்கும்   

                     18.05.2009                                                                   

என்ற பட நிறுவனம் சார்பில் குருநாத் சலசானி தயாரித்திருக்கும் படம் “ 18.05.2009 “

சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன். நாகிநீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி ஆகியோர் நடிக்கிறார்கள்.

எழுத்து – இயக்கம்கு.கணேசன் ( இவர் ஏற்கனவே தமிழ் ஈழம் பற்றி “ போர்க்களத்தில் ஒரு பூ “ என்ற படத்தை இயக்கியவர் )

இசைஇசைஞானி இளையராஜா

ஒளிப்பதிவுபார்த்திபன்சுப்பிரமணியன்

கலை இயக்கம்பிரவீண்

பாடல்கள்மு.மேத்தாபழனிபாரதிநா.முத்துக்குமார்

ஒலிக்கலவையுவராஜ்

மக்கள் தொடர்புமௌனம் ரவி

தயாரிப்புகுருநாத் சலசானி

கதை…

தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள்

2008ம் ஆண்டு இலங்கை அரசால் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட தமிழினப் படுகொலை, 18.05.2009 வரை நீடித்ததுசுமார் ஆறு மாதங்களில் ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத்தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதையும்,  கடைசி நாளில்மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட  40,000 தமிழ் உறவுகள்கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது.

.தமிழினத்தில் பிறந்த ஒரே குற்றத்துக்காக அப்பாவிப் பெண்களைக் கூடவெறிபிடித்தமாதிரி வேட்டையாடியது சிங்கள ராணுவம்….. நீதி கேட்டுக் கதறிய அந்தஅபலைகளின் குரல் ஈழத்தின் காற்றுவெளிகளில் கரைந்து  விட்டது……!

தமிழின வரலாற்றில் ரத்தக்கறை படிந்த அந்த நாளைஎந்த சமரசத்துக்கும் இடம்கொடுத்துவிடாமல்ரத்தமும் சதையுமாகச் சித்தரித்திருக்கிறது 18.05.2009.

அந்த மண்ணில் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள்ராணுவத்தின் துப்பாக்கிமுனையிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பதற்காகவே ஆயுதம் ஏந்தினர்….. தங்கள்உயிரைப் பொருட்படுத்தாமல்தங்கள்  மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தனர்……மரணத்தைத் தழுவும் நிலையிலும் தங்களது விடுதலை வேட்கையை வெளிப்படுத்த அவர்கள் தயங்கவில்லை….. தமிழினத்தைத் தலைநிமிரச் செய்கிற அந்த வீர வரலாற்றைஅழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது 18.05.2009.

18.05.2009  தமிழரின் குருதியால் எழுதப்பட்டிருக்கும் துயர வரலாறு…….

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்கும் குரலை வலுப்படுத்துகிற வரலாறு….

இதுவரை தமிழ்த் திரை மொழியில் எழுதப்படாத வரலாறு…..

 படம் வருகிற 18 ம் தேதி வெளியாக உள்ளது.

வரலாற்றுக்குத் திரைவடிவம் தருவதில் பங்கேற்றோர்.

இயக்குநர் கு.கணேசன்….. சில குறிப்புகள்

கர்நாடகத் தமிழர்.

முதல் திரைப்படமான ‘ஆஷா ஜோதி’ (கன்னடம்மூலம் கன்னடத் திரையுலகின் கவனம்கவர்ந்தவர்.

சவி நிலையா’ திரைப்படத்தின் மூலம் குழந்தை உளவியலைப் படம்பிடித்தவர்.

நானே சத்யாமானவியத்தேநவபாரதிமன்னின மக்களுயாரே நீ மோகினிநம்ம மகு,அம்மடு (தெலுங்கு), மனிதம் (தமிழ்), தடைசெய்யப்பட்டிருக்கும் ‘போர்க்களத்தில் ஒரு பூஆகிய படைப்புகளின் மூலம் தென்னிந்திய மொழிகளில் தடம்பதித்தவர்.

2009ல்ஈழத்தில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த சமயத்தில்பல்லாயிரக்கணக்கான கர்நாடகத் தமிழர்களை ஒருங்கிணைத்துப் போராடுவதில்பின்னணியாய் இருந்தவர்

இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் ‘பொங்குதமிழ்’ மாநாட்டை பெங்களூரில் பிரமாண்டமாக நடத்திஎடியூரப்பா போன்ற கன்னடத் தலைவர்களைக் கூடதமிழர்களுக்காகக் குரலெழுப்ப வைத்தவர்.

தமிழினப்படுகொலைக்கு நீதிகேட்டு  கர்நாடகத்தில் நடத்தப்பட்ட கையெழுத்துஇயக்கத்தின்போது வாங்கிய  பல்லாயிரம் கையெழுத்துப் படிவங்களை .நாமனிதஉரிமைகள் பேரவையில் (ஜெனிவாநேரடியாக ஒப்படைத்தவர்… ஜெனிவா .நாமனிதஉரிமைகள் பேரவையில்ஜெனிவா .நாமனித உரிமைகள் பேரவையில்.

Leave a Comment

Your email address will not be published.

You may also like

Hot News

post-image
Kollywood News Movie Gallery

Nungambakkam Movie, Gallery & Preview

    S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில்          அஜ்மல் நடிக்கும் படம்   “  நுங்கம்பாக்கம் “ ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு  “  நுங்கம்பாக்கம் “என்று பெயரிட்டுள்ளனர்....
Read More
post-image
General Kollywood News

“காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை!” ரஜினிகாந்த் பேட்டி!

நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!* காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை! கர்நாடக மாநிலம் எடியூரப்பா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது....
Read More
Bitnami