தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!

By

 

தென்னிந்திய நடிகர் சங்கம் திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் வரும் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி ஞாயிறு அன்று காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை சென்னையில் கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இது குறித்து  நடிகர் சங்கம் பத்திரிகை  செய்தி வெளியிட்டுள்ளது.
.
“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட் ஆலை’யை மூட வலியுறுத்தியும் மற்றும் ‘காவிரி மேலாண்மை வாரியம் ‘ மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இந்த கண்டன அறவழி போராட்டத்தில் திரைப்பட துறையை சார்ந்த அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம். ” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

# தென்னிந்திய நடிகர் சங்கம்

Leave a Comment

Your email address will not be published.

You may also like

Hot News

post-image
Kollywood News

Nadigar sangam condemned S Ve Sekar

திரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய  நடிகர்  சங்கம் கண்டனம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது… அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால்திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை  இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார். பொதுவாக   முகநூலில் நமக்கு  வரும்  கருத்து பதிவினை, நமக்கு  உடன்பட்டால் மட்டுமே  நாம்  அதை  மற்றவருக்கு  அனுப்புவோம் . அந்த...
Read More
Bitnami