Ilayaraja thanks everyone for their wishes!

By

 

இசைஞானி இளையராஜாவின் நன்றி அறிவிப்பு!

எனக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து, இன்று வரை, என்னை நேரிலும், தொலைபேசிவாயிலாகவும், மனப்பூர்வமாகவும் வாழ்த்து தெரிவித்த, உலகெங்கிலும் பரவி இருக்கும் இசை ரசிகர்கள் , அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், தொழில்துறையினர், மீடியா அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. விருது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் என்னை நேரில்
சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வாழ்த்தும், உங்களின் அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தை தந்துள்ளது. என்னை நெகிழ வைத்துள்ளது. ஆண்டவனின் அருளாலும், உங்கள் அன்பாலும்… மக்களுக்காக என் பணியை செவ்வனே செய்து கொண்டு இருப்பேன். அன்பெனும் மழையில் நனைய வைத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் மனப்பூர்வமான நன்றி.

இப்படிக்கு
இளையராஜா.

சென்னை

 

பத்ம விபூசன் விருது பெற்ற இசைஞானி இளையராஜவை முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பிசி அன்பழகனும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்

You may also like

Hot News

post-image
Kollywood News

Barath’s Kalidoss in final stage

அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...
Read More
Bitnami